தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மறைந்த பாடகி ஜானகிக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்!

மறைந்த பாடகி ஜானகிக்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளது பற்றி...

President condoles the passing of singer Janaki.

மறைந்த பாடகி ஜானகிக்கு குடியரசுத் தலைவர் இரங்கல் - படம் - தினமணி

Updated On :

மறைந்த புகழ்பெற்ற பாடகி ஜானகிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) இரங்கல் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற பாடகி எஸ். ஜானகி (88) வயது மூப்பு காரணமாக சனிக்கிழமை (ஜூலை 11) காலமானார்.

கர்நாடக மாநிலம், மைசூரில் தங்கியிருந்த ஜானகியின் உடல்நிலை மோசமடைந்ததால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இதயம் செயலிழந்து அவா் உயிரிழந்தார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது:

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகியின் மறைவால், இந்தியா ஒரு இசை ஆளுமையை இழந்துள்ளது. அவரது அசாதாரணமான பாடல் பல தலைமுறைகளைக் கவர்ந்தது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது இசைப்பயணம் நீடித்துள்ளது. இந்தி, ஒடியா, துளு, உருது, பஞ்சாபி மற்றும் வங்காளம் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

காலத்தால் அழியாத அவரது இசை என்றும் மதிப்புமிக்கதாக நிலைத்திருக்கும். அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திரௌபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.

Summary

President Droupadi Murmu expressed her condolences on Sunday (July 12) over the passing of the renowned singer Janaki.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.