கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

சரிகம நிறுவனத்திற்கு சாதகமாகத் தீர்ப்பு! மேல்முறையீடு செய்வாரா இளையராஜா?

இளையராஜாவுக்கு எதிரான வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு...

News image

இளையராஜா (கோப்புப்படம)

Updated On :1 ஜூலை 2026, 4:53 pm IST

இசையமைப்பாளர் இளையராஜா 134 திரைப்படங்களுக்கு உரிமை கோர முடியாது என தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா 1500க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துவிட்டார். தற்போது, இளம் இயக்குநர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். மேலும், தான் இசையமைத்த பாடல்களின் உரிமங்களைத் தன்னைக் கேட்காமலோ அல்லது தன்னிடம் அனுமதி பெறாமலோ வேறு இசை நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், பிரபல இசை நிறுவனமான சரிகம நிறுவனம் அவர்களிடம் உள்ள 134 இளையராஜா இசையமைத்த படங்களின் பாடல்களுக்கு உரிமை கோர முடியாது என தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று, அன்னக்கிளி , 16 வயதினிலே, கவிக்குயில், பாரதி, பல்லவி அனு பல்லவி, முள்ளும் மலரும், ராஜ பார்வை, நெற்றிக்கண் , கல்யாணராமன் உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்களுக்கு இளையராஜா உரிமை கோர முடியாது என தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சரிகம நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை ரத்து செய்யவும் தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதனால், இளையராஜாவின் இந்தப் பாடல்களை சரிகம தங்கள் தளங்களில் பதிவேற்றவோ ஸ்ட்ரீமிங் செய்யவோ கூடாது.

இதனால், இளையராஜா தரப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டைச் செய்யலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The Delhi High Court has ruled that music composer Ilaiyaraaja cannot claim rights to 134 films.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.