பெண்கள் ஜீன்ஸ் அணிவது ஆண்களை தவறாக வழிநடத்துகிறது என்ற கருத்து ஏற்புடையதல்ல என்று கூறி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளியை விடுதலை செய்து பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
17 வயதுடைய சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில், ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரன் சுதா இந்தக் கருத்தை திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தகப்பன் இல்லாமல், தாயும், மகளும் வாழும் நிலையில், அப்பெண் நாகரீக உடைகள் அணிவது குற்றம் என்றும், இதனால், அப்பகுதியில் வாழும் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றும், அப்பெண்ணின் நடத்தை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு, ஒன்றும் அறியாத ஆண்கள் மீது அப்பெண் புகார் கொடுப்பதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதையும் நீதிபதி குறிப்பிட்டு, இந்த சம்பவம் குறித்து என்ன சொல்வது என்றே வார்த்தைகள் இல்லை என நீதிபதிகள் குறப்பிட்டுள்ளார்.
ஒரு பெண் என்ன அணிய வேண்டும் என்பதை முடிவு செய்வது அவர்களது தனிப்பட்ட முடிவு. அவரது அண்டை வீட்டாரோ, சமூகமோ, இல்லை குற்றவாளியோ, நீதிமன்றத்தில் வாதாடும் வழக்குரைஞருக்கோ, அவரது ஆடையை முடிவு செய்யும் உரிமையை சட்டம் வழங்கவில்லை. இதில் அவர்கள் கவலைப்பட ஒன்றுமேயில்லை. ஒரு பெண் அணியும் ஆடை, ஆண்களின் மனதை கெடுக்கும் என்ற கருத்தே மிகவும் பிரச்னைக்குரிய மற்றும் ஏற்றுக்கொள்ளத்தகாத மனநிலை.
இதற்கான தீர்வு, பெண்களின் ஆடையை கட்டுப்படுத்துவதில் இல்லை. பெற்றோரும், இந்த சமூகமும், பிள்ளைகளின் மனதைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொடுப்பதில்தான் உள்ளது. மற்றவர்களின் தனிஉரிமையை மதியுங்கள், அனைவரையும் மனிதர்களாக நடத்துங்கள், வீட்டுக்குள்ளும், வெளியிலும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
Summary
Rape caused by women wearing jeans – Delhi High Court's sharp retort!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி கலவரம்: உமர் காலித் ஜாமீன் மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

வாங்சுக் 19-ஆவது நாளாக உண்ணாவிரதம்: உடல்நிலையை கண்காணிக்க தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவு

இதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

சி.வி. சண்முகத்துக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு: உயர்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly



