தில்லி கலவரம் தொடர்பாக சமூக ஆர்வலர் உமர் காலித் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது தில்லி காவல்துறையின் நிலைப்பாட்டை தில்லி உயர்நீதிமன்றம் கோரியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் பிரதிபா, எம். சிங் மற்றும் விகஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய அமர்வு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தில்லி காவல்துறைக்கு உத்தரவிட்டது.
காலித் கைது செய்யப்பட்டதிலிருந்து இது அவரது மூன்றாவது ஜாமீன் மனு, இவ்வழக்கில் அவர் இடைக்கால ஜாமீன் கோருவதாகவும் அவரது வழக்குரைஞர் தெரிவித்தார்.
கூட்டுக் குற்றவாளியான ஷர்ஜீல் இமாமின் ஜாமீன் மனுவும் பட்டியலிடப்பட்டுள்ள ஆகஸ்ட் 27 அன்று, காலித்தின் மனுவையும் விசாரிப்பதாக நீதிமன்ற அமர்வு கூறியது.
தனது ஜாமீன் மனுவை நிராகரித்து ஜூலை 4 அன்று விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து காலித் மேல்முறையீடு செய்துள்ளார்.
தில்லி காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, அதே விசாரணை நீதிமன்ற உத்தரவின் மூலம் இமாமின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டதாகவும், எனவே இரு வழக்குகளையும் நீதிமன்ற அமர்வு ஒன்றாக விசாரிக்கலாம் என்றும் கூறினார்.
செப்டம்பர் 2020-ல் கைது செய்யப்பட்ட காலித் மீது 53 பேர் உயிரிழக்கவும், 700-க்கும் மேற்பட்டோர் காயமடையவும் காரணமாக இருந்த கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக இருந்ததாக காலித் மீது யுஏபிஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
The Delhi High Court on Friday sought the stand of the city police on a plea by activist Umar Khalid seeking bail in a case under the anti-terror law UAPA concerning the "larger conspiracy" behind the February 2020 riots in north-east Delhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாரத்திற்கு இருமுறை உமர் காலித் குடும்பத்தினருடன் பேசலாம்: நீதிமன்றம் அதிரடி!

தில்லி கலவரம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!

சரிகம நிறுவனத்திற்கு சாதகமாகத் தீர்ப்பு! மேல்முறையீடு செய்வாரா இளையராஜா?

தில்லி கலவரம்: உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஜாமீன் மனு தாக்கல்!
விடியோக்கள்

அயோத்தி நன்கொடை திருட்டு விவகாரம்! நாடாளுமன்றத்தில் தொடரும் எதிர்க்கட்சி எம்.பிக்களின் போராட்டம்!




