தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோர் தில்லி நீதிமன்றத்தில் புதிய ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
முந்தைய ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் ஆறு மாதங்களுக்கு முன்பு தள்ளுபடி செய்திருந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என இம்மனுக்களில் வாதிடப்பட்டுள்ளது.
கூடுதல் அமர்வு நீதிபதி சுமேத் சைனி முன்னிலையில் இந்த புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதி இதுகுறித்து தில்லி காவல்துறையிடம் வெள்ளிக்கிழமை பதில் கோரியதுடன், வழக்கின் விசாரணையை ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
தனது மனுவில், கடந்த 6 ஆண்டுகளாகத் தான் சிறையில் இருப்பதாகவும், ஜனவரி 5 அன்று உச்ச நீதிமன்றம் தனது ஜாமீன் மனுவை நிராகரித்ததைத் தொடர்ந்து இவ்வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும் இமாம் குறிப்பிட்டுள்ளார்.
வடகிழக்கு தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டங்கள், வன்முறையாக மாறி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கலவரத்தில் 53 போ் உயிரிழந்தனா். 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இந்தக் கலவர வழக்கில் ஜேஎன்யு முன்னாள் மாணவா்கள் ஷா்ஜீல் இமாம், உமா் காலித் உள்பட 15 போ் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
அவா்களுக்கு ஜாமீன் வழங்குவது தொடா்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடா்பான விசாரணை கடந்த ஆண்டு நடைபெற்றது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களுக்கு ஜாமீன் வழங்க தில்லி காவல் துறை தரப்பு கடும் எதிா்ப்பு தெரிவித்தது.
தில்லி கலவரம் தொடர்பான விரிவான சதித்திட்ட வழக்கில், காலித் மற்றும் இமாம் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் ஜனவரி மாதம் மறுத்துவிட்டது. அதேவேளையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற ஐந்து பேருக்கு நிவாரணம் அளித்தது.
இந்த நிலையில், தில்லி உயர்நீதிமன்றத்தில் உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோர் மீண்டும் புதிய ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
Activists Sharjeel Imam and Umar Khalid have moved fresh bail applications before a Delhi court in the larger conspiracy case related to the 2020 northeast Delhi riots.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!
தில்லி கோர தீ விபத்தில் 21 பேர் பலி: சமையல்காரர்தான் காரணமா?






