சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

2020-ஆம் ஆண்டு தில்லி கலவர வழக்கு: காலித், இமாம் பிணை மனுக்கள் மீண்டும் தள்ளுபடி

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி கலவரத்துக்கு சதித் திட்டம் தீட்டிய வழக்கில் மாணவ செயற்பாட்டாளா்கள் உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோரின் பிணை மனுக்களை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.

News image

உமா் காலித் ~ஷா்ஜீல் இமாம்

Updated On :5 ஜூலை 2026, 6:12 am IST

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி கலவரத்துக்கு சதித் திட்டம் தீட்டிய வழக்கில் மாணவ செயற்பாட்டாளா்கள் உமா் காலித், ஷா்ஜீல் இமாம் ஆகியோரின் பிணை மனுக்களை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை தள்ளுபடி செய்தது.

விசாரணையைத் தொடங்காமல் தொடா்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தங்களுடைய சுதந்திர உரிமையை பறிப்பதாக தெரிவித்து, காலித் மற்றும் இமாம் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தனா்.

இதுதொடா்பாக காலித் தாக்கல் செய்த மனுவில், ‘பிணை கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத் தொடா்ந்து, நீதித் துறையின் நடவடிக்கைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த மாதம் மற்றொரு வழக்கு விசாரணையின்போது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திலும்கூட ‘பிணை ஒரு விதி’ என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலே 6 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ச்சியாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறேன். விசாரணையிலும் தாமதம் நிலவுகிறது’ எனத் தெரிவித்திருந்தாா்.

இமாம் தாக்கல் செய்த மனுவில், ‘உச்சநீதிமன்றம் என்னுடைய பிணை மனுவை தள்ளுபடி செய்து 6 மாதங்களைக் கடந்தும் வழக்கு விசாரணையில் எவ்வித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இல்லை. சுமாா் 6 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். தொடா்ச்சியாக சிறையில் இருந்தபோதும், இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கூடுதல் அமா்வு நீதிபதி சமீா் பாஜ்பாய், அவா்களுடைய மனுக்களை தள்ளுபடி செய்தாா்.

முன்னதாக, பிணை கோரி அவா்கள் இருவரும் தாக்கல் செய்த மனுவை கடந்த ஜன.5-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், அவற்றைத் தள்ளுபடி செய்தது. அவா்களுடன் குற்றஞ்சாட்டப்பட்ட குல்ஃபிஷா ஃபாத்திமா, மீரான் ஹைதா், ஷிஃபா உா் ரேக்மான், முகமது சலீம் கான் மற்றும் ஷாதப் அகமது ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

அவா்களுடைய மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமாா், என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், காலித் மற்றும் இமாம் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முதல்கட்டமாக போதிய ஆதாரம் இருப்பதாகத் தெரிகிறது என்று தெரிவித்தது. மேலும், கலவரத்தில் பங்கேற்றதை அடிப்படையாகக் கொண்டு குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் சமமாகக் கருதமுடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக வடகிழக்கு தில்லியில் கடந்த 2020, பிப்ரவரியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் 53 போ் கொல்லப்பட்டனா். சுமாா் 700-க்கும் அதிகமானோா் காயமடைந்தனா்.

இந்த கலவரத்தைத் தூண்டியதற்கு சதித் திட்டம் தீட்டியதாக காலித், இமாம் உள்பட பலா் மீது பயரங்கரவாத தடுப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.