தமிழுக்கும் பாரதியாருக்கும் கிடைத்த வெற்றி..! கிராமி விருதுக்குத் தேர்வான பாடகர்கள் நெகிழ்ச்சி!

கிராமி விருதுக்கான போட்டியில் தேர்வான முதல் தமிழ்ப் பாடலைப் பாடிய தேவன் ஏகாம்பரம், சுபிக்‌ஷா ரங்கராஜன் கூறியிருப்பதாவது...

Poster for the song 'Varuvaai'

வருவாய் பாடலின் போஸ்டர் - படம்: யூடியூப் / தேவன் ஏகாம்பரம்

Updated On :

கிராமி விருதுக்கான பரிந்துரையில் தேர்வான முதல் தமிழ்ப் பாடலான ’வருவாய்’ பற்றி அதன் பாடகர்கள் தேவன் ஏகாம்பரம், பாடகி சுபிக்‌ஷா ரங்கராஜன், ”இது தமிழுக்கும் மகாகவி பாரதியாருக்கும் கிடைத்த வெற்றி” எனக் கூறியுள்ளார்கள்.

சிறந்த உலக இசைச் செயல்பாடு (Best Global Music Performance) என்ற பிரிவில் 69ஆவது கிராமி விருதுக்காக தமிழ்ப் பாடல் ஒன்று முதல்முறையாக பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவில் தி ரெக்கார்டிங் அகாடமி ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இசை, பாடல், பாடகருக்கு கிராமி விருதுகளை வழங்கி வருகின்றன. 1959 முதல் நடைபெற்றுவரும் இந்த விருதில் இதுவரை தமிழில் இருந்து ஒரேயொரு பாடல் மட்டும்தான் தேர்வாகியுள்ளது.

எல். கிருஷ்ணன் இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடலை மகாகவி பாரதியார் எழுதியுள்ளார். இந்தப் பாடலை தேவன் ஏகாம்பரம், பாடகி சுபிக்‌ஷா ரங்கராஜன் பாடியுள்ளார்கள். எல். கிருஷ்ணன் இசையுடன் தேவன் ஏகாம்பரம் கூடுதல் யுக்திகளைப் புகுத்தி இந்தப் பாடலை உருவாக்கியுள்ளார்.

கிராமி விருதுக்கு தேர்வானது பற்றி தேவன் ஏகாம்பரம், பாடகி சுபிக்‌ஷா ரங்கராஜன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

டியர் நண்பர்களே, நாங்கள் ஆச்சரியத்தில் இருக்கிறோம். வருவாய் 69ஆவது கிராமி விருதில் முதல் தமிழ்ப் பாடலாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சில நாள்களாக உங்களது வாழ்த்துகள், குறுஞ்செய்திகள் எங்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதெல்லாவற்றும் மேலாக இது தமிழுக்கும் மகாகவி பாரதியாருக்கும் கிடைத்த வெற்றி. இசை உலகின் மிகப்பெரிய மேடையில் கிருஷ்ணனுக்காக அவர் கூறிய வார்த்தைகள் கேட்கும்.

நாங்கள் ஒரு விஷயத்தைத் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். வருவாய் பாடலின் அசலான இசை ஸ்ரீ எல். கிருஷ்ணன் பல ஆண்டுகளுக்கு முன்பு இசையமைத்தது. அதற்காக அவர் கொண்டாடப்பட வேண்டியவர். அவரது பெயரை எல்லா இடங்களிலும் நாங்கள் கூறி வருகிறோம். அவருக்கு நாங்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

சிலர் இந்தப் பரிந்துரை இசையமைத்தவருக்கானது எனக் கூறி வருகிறார்கள். அப்படி இல்லை. சிறந்த உலக இசைச் செயல்பாடு என்ற பிரிவிலேயே இந்தப் பாடல் தேர்வாகியுள்ளது. அதாவது ஏற்கெனவே இருக்கும் இசையில் மாற்றம் செய்வதற்காக தரப்படுகிறது. பாடுவது, இசையில் மாற்றங்கள் செய்வபவர்களுக்கானது பட்டியலைக் குறிக்கும். அதனால்தான் நாங்கள் தேர்வாகியுள்ளோம்.

இந்தப் பாடலுக்கு இதயப்பூர்வமாக பங்களிப்பு செய்த ஒவ்வொருவருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். பியானோவுக்காக அனில் ஸ்ரீனிவாசன், கர்நாடிக் ஸ்டைல் கித்தாருக்கான பிரகாஷ் சோன்டக்கே, கித்தாருக்காக நவீன் சாம்சன், தபாலாவுக்காக சர்வஜித், பாஸுக்காக ஜோஷப் ஜான், மிக்ஸிக்காக ரோஷனுக்கும் ஸ்டூடியோவை அளித்த பிருத்வி சந்திரசேகருக்கும் நன்றிகள். இந்தப் பரிந்துரை எங்களைப் போலவே இவர்களுக்கும் உரியது எனக் கூறியுள்ளார்கள்.

இந்த கிராமி விருதுகள் பிப்.2027ல் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படவிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Devan Ekambaram and Susha on Grammy nomination: A victory for Tamil and for Mahakavi Bharathiyar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.