கிராமி விருது போட்டியில் முதல் தமிழ்ப்பாடல்!
கிராமி விருதில் தமிழ்ப்பாடல்...

இசையமைப்பாளர் தேவன் ஏகாம்பரம், பாடகி சுஷா
பாரதியார் வரிகளைக் கொண்ட தமிழ்ப்பாடல் கிராமி விருது போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.
இசைத்துறையின் மிகப்பெரிய விருதான கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்வு அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதைப் பெற உலகம் முழுவதும் பெரிய போட்டியே நிகழும் என்பதால் ஆஸ்கருக்கு நிகரான விருதாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்தாண்டுக்கான கிராமி விருதுப் போட்டி பரிந்துரையில் பாரதியாரின் தெய்வப் பாடலான வருவாய் கண்ணா பாடல் தேர்வாகியுள்ளது.
இசையமைப்பாளர் தேவன் ஏகாம்பரம் இசையமைப்பில் பாடகி சுஷா பாடிய இப்பாடல் கிராமி விருதுக்கான போட்டியில் பங்கேற்க உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. முக்கியமாக, இதுவே கிராமி விருதுக்குச் செல்லும் முதல் தமிழ்ப்பாடல் ஆகும்.
இதற்கு முன் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்காக கிராமி விருதை வென்றிருந்தார். தற்போது, அந்த விருதுக்குத் தமிழர்கள் மீண்டும் பரிந்துரைக்குச் சென்றுள்ளதால் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
A Tamil song featuring lyrics by Bharathiyar has been selected for the Grammy Awards competition.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

