9 பிரிவுகளில் கிராமி விருதுக்கான பரிசீலனையில் துரந்தர்: தி ரிவெஞ்ச்!
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர்: தி ரிவெஞ்ச் படத்தின் இசைகளை கிராமி விருதுக்கான போட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது பற்றி...

துரந்தர்: தி ரிவெஞ்ச் போஸ்டர் - படம்: எக்ஸ் / பி62 ஸ்டூடியோஸ்
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான ’துரந்தர்: தி ரிவெஞ்ச்’ திரைப்படத்தின் பின்னணி இசைகளை கிராமி விருதுக்கான போட்டியில் அனுப்பியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்ஷய் கன்னா, சாரா அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்தப் படம் மார்ச் 19ல் வெளியாகி ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஷஷ்வத் சச்தேவ் அற்புதமான இசையை அளித்திருந்தார். பாடல்கள், பின்னணி இசை என படத்துக்குக் கூடுதல் பலத்தை அளித்திருந்தார்.
இசை உலகின் மிகப்பெரிய விருதாக கிராமி விருதுகள் இருக்கின்றன. பெரும்பாலும் இந்த விருதுகளை அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாட்டினர்களே அதிகமாக பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான பி62 ஸ்டூடியோஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “கிராமி விருதுக்கான பரிசீலனையில் துரந்தர்: தி ரிவெஞ்ச். அனைத்து விதமான அன்புக்கும் நன்றி” எனக் கூறியுள்ளது.
இந்தப் படத்தினை சிறந்த பாடல் வரிகள், ஆசிய அளவிலான பாப், குளோபல் இசை, ராப், பாப், எலெக்ட்ரானிக் மியூசிக் என 9 பிரிவுகளில் கிராமி விருதுக்கான பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
கிராமி விருதுக்கான பரிசீலனை என்பது நாமினேஷனில் வராது. ஆனால், அதற்கான முதல் படி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் கிராமி விருதுக்கான தகுதிகளைப் பெற்றிருந்தால் நாமினேஷனில் அறிவிக்கப்படும் என்பதும் கவனிக்கத்தக்கது.
DHURANDHAR THE REVENGE for your GRAMMYÂ®ï¸ consideration. Thank you for all the love.
— B62 Studios (@B62Studios) October 9, 2026
ð - https://t.co/CQGU3YuPKJ#ForYourConsideration #Grammys #RecordingAcademy #FYC@RanveerOfficial @rampalarjun @duttsanjay @ActorMadhavan #AkshayeKhanna #SaraArjun @bolbedibol @AdityaDharFilms⦠pic.twitter.com/FxMD6bpLph
Summary
Ranveer Singh film Dhurandhar: The Revenge soundtrack submitted for Grammy consideration across eight categories
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


