சந்தீப் கிஷன் படத்தில் இணைந்த கேத்ரின் தெரசா!
நடிகர் சந்தீப் கிஷனின் கரிகாலா படத்தில் இணைந்த நடிகை கேத்ரின் தெரசா குறித்து...

சந்தீப் கிஷன், கேத்ரின் தெரசா - படங்கள்: இன்ஸ்டா / சந்தீப் கிஷன், கேத்ரின் தெரசா
சந்தீப் கிஷன் நடிக்கும் கரிகாலா திரைப்படத்தில் நடிகை கேத்ரின் தெரசா இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழில் பா. இரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் அறிமுகமான கேத்ரின் தெரசா கதகளி, கலகலப்பு 2 ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சிக்மா படத்தில் சிறப்பு நடனமாடியிருந்தார். இந்த நிலையில் அவரது பிறந்த நாளில் அவர் கரிகாலா படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷைனிங் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் கரிகாலா படத்தினை உகந்தர் முனி இயக்குகிறார். முன்னதாக தெலுங்கில் இவர் இயக்கிய ஷம்பாலா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
கரிகாலா படத்தில் நடிகை கேத்ரின் தெரசா நாயகியாக நடிக்கவிருக்கிறார் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. கடைசியாக சிரஞ்சீவியின் மன ஷங்கர வர பிரசாத் காரு படத்தில் நடித்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கரிகாலா படம் பான் இந்திய படமாக உருவாகி வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் ஜூலை 2, 2027ல் வெளியாகும். இரண்டாவது பாகம் அக்.28, 2027ல் வெளியாகுமெனவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sundeep Kishan X Catherine Tresa Loving Combo For #Karikaala :))
— Sumanth (@SumanthOffl) October 9, 2026
Chapter 1 - 02 July 2027
Chapter 2 - 28 October 2027 pic.twitter.com/GC8cKF2X6a
Summary
Catherine Tresa on board for Sundeep Kishan’s Pan India film Karikaala
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


