
ஜெயிலர் 2ல் தமன்னாவை சேர்க்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை நெல்சன் நிராகரித்தார்: ரஜினி
ஜெயிலர் 2 சூப்பர் ஷோ நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் தமன்னா குறித்து பேசியிருப்பதாவது...

காவாலா பாடலில் தமன்னா உடன் ரஜினி - படம்: யூடியூப் / சன் டிவி
ஜெயிலர் 2 சூப்பர் ஷோ நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், “ இந்தப் படத்தில் ஒரு பாடலில் ஆவது தமன்னாவை ஆட வையுங்கள் என நான் வைத்த கோரிக்கையை இயக்குநர் நெல்சன் நிராகரித்து விட்டார்” எனக் கூறியுள்ளார்.
ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றியினால் இதன் இரண்டாம் பாகத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் அக்.15ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களிலும், மோகன் லால், ஷிவராஜ் குமார் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறாததால், உள்ளரங்கில் அனைத்து நடிகர் நடிகைகள் வைத்து சூப்பர் ஷோ என புரமோஷன் செய்யப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் தமன்னா குறித்து பேசியிருப்பதாவது:
ஜெயிலர் 2 படத்தில் எல்லாமே இருக்கிறது. ஒரேயொரு மிஸ்ஸிங் தமன்னா மட்டும்தான். நெல்சனிடம் எப்படியாவது ஒரு பாடலுக்கு தமன்னாவை பயன்படுத்துங்கள் எனக் கூறினேன். அதற்கு நெல்சன், ‘உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்கு எல்லாம் என்னால் வைக்க முடியாது சார்’ எனக் கூறிவிட்டார்.
நான் எனக்குப் பிடிக்கும் என்பதால் கேட்கவில்லை. மக்களுக்குப் பிடிக்கும் என்பதால்தான் கேட்டேன். நான் எனக்குப் பிடித்ததை மட்டுமே வைத்திருந்தால் இந்நேரம் பெங்களூருக்குச் சென்றிருப்பேன். மக்களுக்குப் பிடித்ததை செய்ததால்தான் நான் இன்னும் திரைத்துரையில் நீடிக்கிறேன் என்றார்.
முதல் பாகத்தில் தமன்னாவின் காவாலா என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இரண்டாம் பாகத்தில் தமன்னாவுக்குப் பதிலாக பூர்ணா, நோரா ஃபதேகி நடனமாடி இருக்கிறார்கள்.
Summary
I told Nelson to keep Tamannaah Bhatia for one song but he denied says Rajini
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






