மேகமலை வழக்கு! ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் குழு!அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் நவ. 18 வரை நீட்டிப்பு!பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்! விசாரணை தொடக்கம்!மாமல்லபுரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதல்! இருவர் பலி, 8 பேர் கவலைக்கிடம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,960 குறைந்தது! வெள்ளி விலையும் சரிவு! (நவ. 6)

விஜய் சேதுபதியின் பாக்கெட் நாவல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள பாக்கெட் நாவல் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து...

A scene from the filming of the movie 'Pocket Novel'.

பாக்கெட் நாவல் படத்தின் படப்பிடிப்புக் காட்சி. - படம்: எக்ஸ் / டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட்

Updated On :

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள பாக்கெட் நாவல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பொங்கள் விழாவை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

நடிகர் விஜய்சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ஏற்கெனவே, சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு தேசிய விருது பெற்ற இந்தக் கூட்டணியில் உருவாகியுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் மாளவிகா மோகனன், ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக இளையராஜா இசையில் உருவாக இருந்தது. கருத்து வேறுபாட்டால் பிரிந்ததாக தகவல்கள் வெளியான நிலையில் பின்னர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், படம் பொங்கலை முன்னிட்டு ஜன.14ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாக இருக்கிறதாக படக்குழு அறிவித்துள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகி வரும் பாக்கெட் நாவல் படம் ஜப்பானிய மொழியிலும் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

Summary

Release date announced for Vijay Sethupathi Thiagarajan Kumararaja 'Pocket Novel'!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.