
ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முதற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பல திரைப்படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன.
அனுராக் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ் 2.0’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் சினிமா விமர்சகர்களால் அதிகம் பாராட்டுக்களைப் பெற்றுள்ள படங்களாகும்.
தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். லியோவிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரது அடுத்த படமான ‘கென்னடி’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் புட்டேஜ் எனும் படம் உருவாகியுள்ளது.
இதில் விஷாக் நாயரை கட்டியணைத்திருக்கும் படம் வைரலானது. இந்தப் படத்தினை இயக்கியுள்ளார் சைஜு ஸ்ரீதரன். கும்பளாங்கி நைட்ஸ் படத்தின் எடிட்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் சிறப்பு திரையிடலில் பங்கேற்ற இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியதாவது:
இந்தமாதிரியான திரைப்படத்தை எடுப்பது மிகவும் கடினம். படக்குழு மிகப்பெரிய சோதனையை செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இந்தப்படம் பிடித்துக்கொண்டே செல்கிறது.
இதுமாதிரியான ஒரு படத்தை எடுப்பது மிகவும் கடினம். ஒளிப்பதிவு, திரைக்கதை, பின்னணி இசை, ஒலியமைப்பு என அனைத்துமே அற்புதமாக இருந்தன. இதுமாதிரி படமெடுக்க கூடுதலான நேரமெடுக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.