
மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான த்ரிஷா, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் நீண்ட நெடிய ஆண்டுகள் தனக்கான இடத்தை தக்க வைத்தார்.
அஜித்துடன் நடித்த மங்காத்தா படத்துக்கு பிறகு சரியான திரைப்படம் அமையாமல் தவித்து வந்த த்ரிஷாவுக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன், லியோ திரைப்படங்களின் மூலம் மீண்டும் பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா.
தற்போது, அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்திலும் கமலின் தக் லைஃப் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஷ்வம்பரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான பிருந்தா இணையத்தொடர் நல்ல கவனம் பெற்றது.
அர்ஜுன் ரெட்டி, அனிமல் திரைபடங்கள் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் வங்கா. இவரது படங்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சையாவதும் பொது மக்களிடையே வரவேற்பைப் பெறுவதும் வசூலில் அசத்துவதும் வழக்கமாகிவிட்டன.
அனிமல் திரைப்படத்துக்குப் பிறகு தற்போது நடிகர் பிரபாஸுக்காக ஸ்பிரிட் எனும் கதையை எழுதி வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
நாயகனாவும் வில்லனாகவும் பிரபாஸ் நடிக்கிறார். இதில் நடிகை த்ரிஷா வில்லனுக்கு ஜோடியாக நடிப்பதா ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில் த்ரிஷா நடிப்பது உண்மையானால் கொடி படத்துக்குப் பிறகு வில்லியாக நடிக்கும் 2ஆவது திரைப்படமாக ஸ்பிரிட் இருக்கும்.
அனிமல் திரைப்படத்தினை நடிகை த்ரிஷா பாராட்டி பதிவிட்டதும் பின்னர் சர்ச்சையாகவே நீக்கியதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.