
மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை குறித்து இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி கருத்து தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனா். அதைத் தொடா்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறாா்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 போ் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது.
கடந்த 2019-இல் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிக்கையின் அதிா்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த திங்கள்கிழமை வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள திரையுலகின் தொழில்துறையை 10-15 போ் அடங்கிய அதிகார ‘கும்பல்’ கட்டுப்படுத்துகிறது. இவா்கள் திரையுலகின் பெண் தொழிலாளா்கள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகிறது’ என்று ஹேமா குழு அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டது.
கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள உயர்நீதிமன்றமும் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், பிரபல மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசரி, “நீதிபதி ஹேமா அறிக்கையில் குறிப்பிட்ட விஷயங்களைத் தீவிரமாக பேச வேண்டும். அமைதியாக இருப்பது தீர்வல்ல” எனக் கூறியிருக்கிறார்.
கேரள சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களும் ஹேமா அறிக்கையை வெளியிட வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.