
டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த சின்னத்திரை நடிகை திவ்யா, தனது உடல் நிலை சீரானதைத் தொடர்ந்து, மீண்டும் ஆன்மிக பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
டெங்குவால் பாதிக்கப்பட்டதால் சமீபத்தில் மகாநதி தொடரில் இருந்து திவ்யா விலகுவதாக அறிவித்திருந்தார். அவருக்கு பதிலாக நடிகை தாரணி நடித்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரை இயக்குநர் ப்ரவீன் பென்னெட் இயக்குகிறார்.
தந்தையை இழந்த 4 சகோதரிகள், தாயின் துணையோடு சமூகத்தின் சவால்களை சந்தித்து தங்களின் இலக்குகளை அடைவதே மகாநதி தொடரின் மையக்கதை.
இந்தத் தொடரில் கங்கா என்ற முதன்மை பாத்திரத்தில் நடிகை திவ்யா நடித்து வந்தார். இதனிடையே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், ஆகஸ்ட் மாத தொடக்கத்தில், மகாநதி தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்த செய்தி மகாநதி தொடரின் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது.
ஏனெனில், இதற்கு முன்பு நடிகை பார்த்திபா இப்பாத்திரத்தில் நடித்து வந்தார். அவரு மாறிய பிறகு அந்த பாத்திரத்தில் திவ்யா நடித்து வந்தார். தற்போது அவரும் மாறியுள்ளார். அவருக்கு பதிலாக சிங்கப் பெண்ணே தொடரில் நடித்து வந்த தாரணி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் உடல் நிலை தேறிய திவ்யா, தனது தோழி கம்பம் மீனாவுடன் கோயிலுக்குச் சென்றுள்ளார். படப்பிடிப்பில் ஓய்வு நேரத்தின்போது அடிக்கடி ஆன்மிக பயணம் செல்வதில் நாட்டமுடையவர். கோயிலுக்குச் சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி ரசிகர்களுடன் தொடர்ந்து உரையாடுவது திவ்யாவின் வழக்கம்.
அந்தவகையில் கிருஷ்ண ஜெயந்தியான இன்று சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் திவ்யா பகிர்ந்துள்ளார்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு, சமூக வலைதளத்தில் நடிகை திவ்யா, தனது புகைப்படத்தை பதிவேற்றியுள்ளதால் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.