சுந்தரி தொடரில் நடிகர் திலக் மற்றும் தக்ஷனா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இவர்கள் சகோதர, சகோதரியாகவே நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு சுந்தரி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. சுந்தரி முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
கிராமத்துப் பெண் ஆட்சியர் ஆக வேண்டு என்ற கனவோடு நகரத்துக்கு வந்து போராடி ஆட்சியர் ஆனதே சுந்தரி முதல் பாகத்தின் கதை. இதில் படிக்காத பெண் என சுந்தரியை புறம்தள்ளி, படித்த வசதியான பெண்ணை நாயகன் திருமணம் செய்துகொள்வார்.
இதனிடையே ஆட்சியர் ஆன பிறகு, நாயகனின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தையை வளர்க்கிறார் ஆட்சியர் சுந்தரி. இவர்களுக்கு இடையேயான கதையை மையமாக வைத்து சுந்தரி -2 ஒளிபரப்பாகிறது.
இந்நிலையில், இந்தத் தொடரில் நடிகர் திலக் மற்றும் நடிகை தக்ஷனா நடிக்கவுள்ளனர். அவர்கள் இருவரும் சகோதர, சகோதரிகளாகவே தொடரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானத்தைப்போல தொடர் முடிவுக்கு வந்தது. இந்தத் தொடரில் திலக்கும், தக்ஷனாவும் நடித்திருந்தனர். வானத்தைப்போல தொடர் முடிந்ததால், அவர்கள் இருவரும் தற்போது சுந்தரி தொடரில் புதிய பாத்திரங்களில் தோன்ற உள்ளனர். இவர்களுக்கு சின்னத்திரை ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.