பாலிவுட்டில் முக்கியமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். 2006-ஆம் ஆண்டு வெளியான அனுராக் காஷ்யப்பின் 'கேங்ஸ்டர்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான கங்கனா ரனாவத் தனது சிறப்பான நடிப்பினால் இதுவரை 4 முறை தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
2019இல் ‘மணிகர்னிகா- ஜான்சி ராணி’ படத்தினை கிறிஸ் ஜகர்லாமுடி உடன் இணைந்து இயக்கியுள்ளார். தற்போது எமர்ஜென்சி படத்தினை முழுக்க முழுக்க அவரே இயக்கியுள்ளார்.
நடிகையாக மட்டுமில்லாமல் தற்போது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.ஆகவும் மாறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை முன்வைத்து எடுக்கப்பட்டுள்ளப் படத்தில் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ள கங்கனா ரணாவத், அவரே இந்தப் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்.
ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் வரும் செப்.6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதற்கான புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு சிராக் பஸ்வான் நேர்காணல் ஒன்றில், “பாராளுமன்றத்தில் கங்கனாவை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். கடந்த 2-3 வருடங்களாக நான் மிகவும் பிஸியாக இருப்பதால் அவருடன் பேச முடியவில்லை. அவருக்கு எந்த டிப்ஸும் வழங்கத் தேவையில்லை. அவர் சுயமாக சிந்திக்கும் பெண்மணி. வலுவான கருத்துடையவர்” எனக் கூறியிருந்தார்.
பின்னர் பாராளுமன்றத்தில் கங்கனாவும் சிராக் பஸ்வானும் சந்தித்த புகைப்படங்கள் வைரலாகியது.
இருவரும் 2014இல் மிலே நா மிலே ஹம் என்ற படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். இதனால் சமூக வலைதளங்களில் இருவர் பற்றியும் காதல் என்ற வதந்திகள் வரவே இந்தச் சிக்கல்களிலிருந்து இருவரும் தள்ளியிருக்கிறார்கள்.
எமர்ஜென்சி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிராக் பஸ்வான் குறித்து கேட்ட கேள்விக்கு கங்கனா, “நாடாளுமன்றம் என்பது நமது அரசியலமைப்பின் கோயில். அங்கு நான் எனது தொகுதியை பிரதிநிதித்துவம்படுத்த செல்கிறேன். எனக்கு சிராக் பஸ்வானை பல ஆண்டுகளாக தெரியும். அவர் எனக்கு நல்ல நண்பர். ஆனால் உங்களால்தான் தற்போதெல்லாம் என்னைப் பார்த்தால் அவராகவே விலகி செல்கிறார்” என்றார்.