நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171 படமாக கூலி உருவாகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. இதில், சிமோன் என்கிற கதாபாத்திரத்தில் நாகர்ஜுனா நடிக்கிறார்.
நாகர்ஜுனாவின் 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது.
முன்னதாக மலையாள நடிகர் சௌபின் சாகிர் நடிப்பதையும் கூலி படக்குழு உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ், தெலுங்கில் உருவாகும் குபேரா படத்திலும் தனுஷுடனும் நாகர்ஜுனா நடிக்கிறார். இன்று அந்தப் படத்தின் போஸ்டரும் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.