காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தங்கலான் ரூ.100 கோடிக்கும் அதிக வசூல்! அதிகாரபூர்வ அறிவிப்பு!

பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் திரைப்படம் ரூ.100கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு.

தங்கலான் போஸ்டர்.

Published On :

நடிகர் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் ஆக.15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படத்தில் நாயகனாக விக்ரம் சிறப்பாக நடித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெறும் தங்கலான் இதுவரை உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முக்கியமாக, தெலுங்கிலும் இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், வருகிற ஆக. 30 ஆம் தேதி ஹிந்தியிலும் இப்படம் வெளியாவதால், இந்தாண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக தங்கலான் இருக்கும் என்றே தெரிகிறது.

இந்நிலையில் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் விக்ரம் படக்குழுவுக்கு விருந்து வைத்திருந்தார்.

செப்.9ஆம் தேதி ஹிந்தியிலும் வெளியாகவுள்ளதால் இதன் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.