ஜார்க்கண்ட் பகுதியைச் சேர்ந்த உலிஹட்டில் பிறந்தவர் பிர்சா முண்டா. பழங்குடி இன மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து போராடிய முண்டா, 1890களில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, 25ஆவது வயதில் சிறையில் இறந்தார்.
அவருடைய வாழ்க்கையைத் திரைப்படமாக எடுப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே இயக்குநர் பா. இரஞ்சித் கூறியிருந்தார்.
பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா பிறந்தநாள் ‘ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்’ என்று கொண்டாடப்படுகிறது.
தற்போது தங்கலான் புரமோஷனுக்காக மும்பை சென்ற பா. இரஞ்சித், பார்வதி, விக்ரம் யூடியூப் கலந்துரையாடல்களில் பங்குபெற்றனர்.
இந்த நேர்காணலில் பா. இரஞ்சித்திடம் ஹிந்தி திரைப்படம் எப்போது எனக் கேட்டார்கள். அதற்கு பா.இரஞ்சித், “பிர்சா முண்டா படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்தன. நாயகர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும்.
தங்கலான் 2 எடுக்க வாய்ப்புள்ளதாகவும் ஆனால் இப்போதைக்கு இதிலிருந்து வெளியேற வேண்டும். பல கதைகள் இருக்கின்றன. எதை எடுப்பது என்பதை இன்னும் 2 வாரங்களில் முடிவெடுக்கவிருக்கிறேன்” எனக் கூறினார்.
தங்கலான் ஹிந்தியில் செப்.6ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. சார்பட்டா 2, ஜெர்மனி, ஹிந்தி திரைப்படம் உள்பட பல கதைகள் உள்ளன.
இப்போதைக்கு சார்பட்டா பரம்பரை 2 படத்துக்கான வேலைகள்தான் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் நேர்காணலில் இயக்குநர் பா.இரஞ்சித் கூறினார்.