மத்திய அரசின் கலாச்சார துறையுடன் இணைந்து தேவ்ரிக்ஷா நாடகக் குழு 15ஆவது ஆண்டாக நடத்தும் நாடகத் திருவிழாவில் பல்வேறு நாடகங்கள் நடைபெறவிருக்கின்றன.
தமிழ் சினிமாவில் தற்போதுள்ள பிரபலமான நடிகர்கள் பலர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ந.முத்துசாமியின் மறைவுக்கு, “தமிழ் கலை உலகத்துக்கு மிகப்பெரிய இழப்பென்றும் ஒரு சில தனிமனிதர்களின் இழப்பை ஒரு தலைமுறைதான் ஈடு செய்ய வேண்டும்” என நடிகர் கமல் கூறியிருந்தார்.
சென்னையில் வரும் ஆக.31, செப்.1ஆம் தேதிகள் (சனி, ஞாயிறு) பத்மஸ்ரீ விருதுபெற்ற நா. முத்துசாமியின் அர்ஜுனன் தபசு நாடகம் நடைபெறவிருக்கிறது.
இந்த நாடகத்தில் திண்டுக்கல் லியோனி மகன் சிவகுமாரும் இன்ஸ்டா புகழ் ஷாலினியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த நாடகத்தை ஸ்ரீ தேவி கங்கைய்யா இயக்குகிறார்.
இடம்: கோல்டன் திருமண மண்டபம், சாலிகிராமம், சென்னை.
தேதி : ஆக.31, செப்.1. நேரம்: இரவு 7-8 மணி.
இரண்டு நாள்களும் நடைபெறும் இந்த நாடகத்து அனுமதி இலவசம். நாடகம், சினிமா கலையியக்க விரும்பிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதல் நாளான ஆகஸ்ட் 31 ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி எழுதிய சிலப்பதிகாரம் நாடகம் இயக்குநர் பார்த்திப ராஜா இயக்கத்தில் நடைபெறவுள்ளது.
மாலை 5.30 மணிக்கு தேநீர் இடைவேளையும், மாலை 6 மணிக்கு துடும்பாட்டம் நிகழ்ச்சியும், 7 மணிக்கு அர்ச்சுனன் தபசு நாடகம் நடைபெற இருக்கிறது.
இரண்டாம் நாளான செப்டம்பர் 1 ஆம் தேதி மதியம் 2.15 மணிக்கு வைக்கோம் முகமது பஷீர் எழுதிய இயக்குநர் டாக்டர் ஆழி இ. வெங்கடேசன் இயக்கத்தில் மதில்கள் நாடகமும், மதியம் 3.15 மணிக்கு டாக்டர் கார்த்திகேயன் எழுதிய இயக்கிய அய்யன் வள்ளுவன் நாடகமும் நடைபெறுகிறது.
மாலை 5.30 தேநீர் இடைவேளையும், மாலை 6 மணிக்கு அம்புஜவள்ளி மற்றும் 6.30 மணிக்கு வித்யா ஆகியோரின் கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இரவு 7 மணிக்கு பத்மஸ்ரீ விருதுபெற்ற நா. முத்துசாமியின் அர்சுனன் தபசு நாடகம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.