கோட் படத்தின் 4வது பாடலான ‘மட்ட’ பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
லியோ படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times). இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது. முன்னதாக, விசில்போடு, சின்னச் சின்ன கண்கள், ஸ்பார்க் ஆகிய மூன்று பாடல்களைப் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதனிடையே படத்தின் 4வது பாடல் வரும் 31 ஆம் தேதி அதாவது நாளை வெளியாகவிருப்பதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
‘மட்ட’ எனத் தொடங்கும் அந்த பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு தற்போது புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பாடலாசிரியர் விவேக் தனது எக்ஸ் தளத்தில்,
மச்சி கெடா மஞ்ச சட்ட
மம்டி வரான் பள்ளம் வெட்ட
மட்ட மட்ட ராஜ மட்ட
எங்க வந்து யாரு கிட்ட என பாடல் பற்றிய தகவலை குறிப்பிட்டுள்ளார்.