
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 10வது வாரத்தில் 9 போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரத்தில் இதுவரை இல்லாதவகையில் ஆர்.ஜே. ஆனந்தி, சாச்சனா என இரண்டு போட்டியாளர்கள் வெளியேறினர்.
பிக் பாஸ் வீட்டில் வைல்டு கார்டு மூலம் நுழைந்த போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாலும், 50 நாள்களைக் கடந்துவிட்டதாலும், கடந்த வாரம் இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து 15 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் வீட்டில் 10வது வாரம் தொடங்கியுள்ளது.
இந்த வாரத்தில் நாமினேஷன் (பிக் பாஸ் வீட்டில் நீடிக்கத் தகுதியற்றவர்கள் எனக் கருதி போட்டியாளர்கள் வாக்களிப்பது) செய்யும் நடைமுறை நடைபெற்றது. இதில் அதிக நபர்களால் நாமினேஷன் செய்யப்பட்டு ஜாக்குலின் முதலிடத்தில் இருந்தார்.
இவரைத் தொடர்ந்து ரயான், செளந்தர்யா, விஜே விஷால், அருண், பவித்ரா, தர்ஷிகா, சத்யா, அன்ஷிதா ஆகியோர் இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மக்களிடம் அதிக வாக்குகளைப் பெறும் போட்டியாளர் காப்பாற்றப்படுவார். மிகக்குறைந்த வாக்குகளைப் பெறும் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்.
கடந்த வாரம் இரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டதைப் போன்று இந்த வாரமும் இரு போட்டியாளர்கள் வெளியேற்ற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | பிக் பாஸ் வீட்டில் முதல்முறையாக திரையிடப்பட்ட தமிழ்ப் படம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.