தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விஜய் சேதுபதியின் அறிவுரைப்படி விளையாடும் ரஞ்சித்! ரசிகர்கள் கிண்டல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் மற்றவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

News image

பிக் பாஸ் வீட்டில் ஜாக்குலின் உடன் வாக்குவாதத்தில் ரஞ்சித்

படம் | எக்ஸ்

Updated On :19 டிசம்பர் 2024, 10:48 am

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் மற்றவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை முன்வைத்துள்ளார். முதல்முறையாக மற்றவரிடம் ரஞ்சித் இவ்வாறு பேசுவதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ரஞ்சித் முதல்முறையாக முன்னோட்ட விடியோவில் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதுவரை வெளியான பல முன்னோட்ட விடியோக்களில், பிக் பாஸ் வீட்டில் சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டிவரும் நபர்கள் இடம்பெறுவது வழக்கம். அல்லது சர்ச்சையான - அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடும் போட்டியாளர்கள் முன்னோட்ட விடியோவில் இடம்பெறுவார்கள்.

இதில் எந்தவகையிலும் ரஞ்சித் இல்லாததால், அவரை மையமாக வைத்து முன்னோட்ட விடியோக்கள் வெளியானதில்லை.

வாக்குவாதத்தில் ரஞ்சித்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாக்குலின் உடன் ரஞ்சித் வாக்குவாதத்தில் ஈடுபடும் முன்னோட்ட விடியோ இன்று (டிச. 19) வெளியாகியுள்ளது. இதில், ஜாக்குலின் உடன் காரசாரமான வாதத்தில் ரஞ்சித் ஈடுபடுகிறார்.

யாருமே இல்லாத கோட்டையை ரஞ்சித் பாதுகாத்துக்கொண்டிருந்ததாக ஜாக்குலின் கிண்டலாகப் பேசுகிறார். இதனால் கோபமடைந்த ரஞ்சித், அது போட்டியில் என்னுடைய ஈடுபாட்டைக் காட்டுகிறது. நீங்கள் அதைப் பற்றி பேச வேண்டாம் என்கிறார்.

Story image

அப்போது ரஞ்சித்துக்கு சமயோஜித புத்தி இல்லை என ஜாக்குலின் குறிப்பிடுகிறார். இதனால் விரக்தியடைந்த ரஞ்சித் வார்த்தைகளை பார்த்து உபயோகிக்குமாறு அறிவுறுத்துகிறார்.

பிக் பாஸ் வீட்டில் இவருக்கு இது இல்லை, அது இல்லை எனக் கூறுவது ஏன்? எதற்கு இந்த மாதிரி ஒரு விளையாட்டு என ஜாக்குலினை கேள்வி கேட்கிறார். இந்த விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ரஞ்சித்

ரஞ்சித்

உண்மை முகத்தைக் காட்டிய ரஞ்சித்

கடந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டின் கேப்டனாக ரஞ்சித் பொறுப்பேற்றிருந்தார். கேப்டனாக இருந்தும் பிரச்னைகளில் தலையிடாமல், அதற்கு தீர்வு காணாமல் அமைதியாகவும், கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டும் இருந்ததாக விஜய் சேதுபதி விமர்சித்திருந்தார்.

உண்மையான முகத்தை மக்களும் வீட்டில் உள்ள சக போட்டியாளர்களும் சில இடங்களில் பார்த்துவிட்டதாகவும், இன்னும் ஏன் சாந்தமானவர் என்ற முகமூடி போட்டு அதனை மறைத்துக்கொண்டு இருக்குறீர்கள் என விஜய் சேதுபதி விளாசினார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் அறிவுரைப்படி ரஞ்சித் விளையாட ஆரம்பித்துள்ளதாக ரசிகர்கள் பலர் முன்னோட்ட விடியோவில் குறிப்பிட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் கருத்து

ரசிகர்கள் கருத்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.