
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சங்கர் தயாள் நெஞ்சுவலி காரணமாக இன்று (டிச. 19) காலமானார். இவருக்கு வயது 47.
சகுனி படத்தைத் தொடர்ந்து தற்போது குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற படத்தை சங்கர் தயாள் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இயக்குநர் சங்கர் தயாளுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
கார்த்தி நடிப்பில் வெளியான அரசியல் திரைப்படமாக சகுனி இருந்தது. இப்படத்தை சங்கர் தயாள் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பிறகு 2016ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வீர தீர சூடன் படத்தை இயக்கினார்.
தற்போது, 8 ஆண்டுகள் கழித்து, யோகி பாபுவை முதன்மை பாத்திரமாக வைத்து குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற திரைப்படத்தை சங்கர் தயாள் இயக்கியுள்ளார்.
இப்படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (டிச. 19) நுங்கம்பாக்கத்தில் உள்ள அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கு வந்த இடத்தில், பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்குவதற்கு முன்பு நெஞ்சுவலி என்று கூறியுள்ளார். இதையடுத்து, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
படம் வெளியாவதற்கு முன்பே, அதன் இயக்குநர் மறைந்த செய்தி சினிமாத் துறை மட்டுமின்றி மக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | விஜய் 69: விஜய்யின் கதாபாத்திரம் என்ன தெரியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.