
விஜய்யின் கடைசி படமான விஜய் 69 படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் விஜய் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார்.
இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பூஜா ஹெக்டே இணைந்திருக்கிறார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலதிகாரி ஒருவர் சிறப்பு வழக்குக்காக மீண்டும் காவலதிகாரியாக மாறுவதாக விஜய் 69 படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் ஏற்கனவே போக்கிரி, ஜில்லா, தெறி ஆகிய படங்களில் காவலதிகரியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் அக்.2025இல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்திருக்கிறது.
கடந்த அக்.4ஆம் தேதி படத்தின் பூஜை தொடங்கியது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதில் பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜூ நடிக்கிறார்கள்.
சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ள பூஜா ஹெக்டே ஷாகித் கபூருடன் தேவா படத்திலும் நடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.