
ஆர்யா - பா. இரஞ்சித் கூட்டணியில் உருவாகவுள்ள சார்பட்டா - 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021-ல் ஓடிடியில் நேரடியாக வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதிலும் நாயகனாக ஆர்யாவே நடிக்கிறார்.
இதற்காக, ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளையும் குத்துச்சண்டைப் பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிக்க: விடுதலை - 2 முதல் நாள் வசூல்!
மேலும், இரண்டாம் பாகம் ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். காரணம், சார்பட்டா முதல் பாகம் ஓடிடியில் வெளியாகி திரையரங்க வசூலைத் தவறவிட்டிருந்தது. அதனால், இந்த முறை திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட பா.இரஞ்சித் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் துவங்கும் என நடிகர் ஆர்யா அப்டேட் கொடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.