செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

இந்தாண்டில் அதிகம் வசூலித்த தமிழ் திரைப்படங்கள்!

இந்தாண்டில் அதிகம் வசூலித்த தமிழ் திரைப்படங்கள் குறித்து...

News image
Updated On :24 டிசம்பர் 2024, 4:47 pm IST

இந்தாண்டில் வெளியான சில தமிழ்ப் படங்களின் வசூல் ஆச்சரியப்படுத்தியுள்ளன.

2024 ஆம் ஆண்டு நிறைவடையப்போகிறது. இந்தாண்டில், சர்வதேச அளவிலான அங்கீகாரங்களையும் வணிக வெற்றிகளையும் பல இந்தியப் படங்கள் பெற்றன. முக்கியமாக, ஆல் வி இமாஜின் ஏஸ் லைட் (All we imagine as light) திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைவிழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருது பெற்று அசத்தியது. தமிழில் உருவான கொட்டுக்காளி திரைப்படத்துக்கும் சர்வதேச வரவேற்புகள் கிடைத்தன.

வணிக ரீதியாக சலார், கல்கி, புஷ்பா - 2, ஸ்ட்ரீ - 2 என பல பிளாக்பஸ்டர் வசூல் படங்களும் அமைந்தன. அப்படி, தமிழிலும் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றதுடன் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி லாபகரமான வருவாயை ஈட்டின.

நடிகர் விஜய்யின் கோட் படம் ரூ. 450 கோடி வரை வசூலித்து முதலிடத்தில் உள்ளது. சிவகார்த்திகேயனின் அமரன் ரூ. 300 கோடியையும் வேட்டையன் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மேலும், விஜய் சேதுபதியின் மகாராஜா (ரூ. 170+ கோடி), கமல்ஹாசனின் இந்தியன் - 2 (ரூ.160+ கோடி), தனுஷின் ராயன் (ரூ.150+) சூர்யாவின் கங்குவா (ரூ.130+), அரண்மனை - 4 (ரூ. 110 கோடி), தங்கலான் (ரூ. 90 - 100 கோடி), கேப்டன் மில்லர் (ரூ.90 கோடி) ஆகிய படங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.

அதேநேரம், லவ்வர், கருடன், லப்பர் பந்து, பிளாக், மெய்யழகன் போன்ற திரைப்படங்கள் குறைவான பட்ஜெட்டில் உருவாகி வணிக வெற்றியைப் பெற்றதுடன் நல்ல படங்கள் என ரசிகர்களிடம் பாராட்டுகளையும் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.