விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

த்ரிஷா, டோவினோ தாமஸின் புதிய பட டிரைலர்!

நடிகை த்ரிஷா மலையாளத்தில் நடித்துள்ள புதிய படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2024, 4:20 pm

நடிகை த்ரிஷா மலையாளத்தில் நடித்துள்ள ஐடென்டிடி டிரைலர் வெளியாகியுள்ளது.

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் முன்னணி நடிகையாக பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா. விஜய்யுடன் நடித்த லியோ திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வருகிறார். தற்போது கமல் (தக் லைஃப்), அஜித் (விடா முயற்சி) படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மலையாளத்தில் நடிகர் டோவினோ தாமஸ் உடன் இணைந்து ஐடென்டிடி படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை அகில் பால் - அனாஸ் கான் எழுதி இயக்கியுள்ளார்கள்.

இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ஸ்ரீ கோகுல மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வினய் ராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜனவரி 2ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.