
பிக் பாஸ் வீட்டுக்குள் முன்னாள் போட்டியாளர் விஷ்ணுவிடம் தனது காதலை செளந்தர்யா வெளிப்படுத்தியுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி 12-வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் போட்டியாளர்கள் வீட்டுக்குள் வரும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
அனைத்து போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்களும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றுள்ள நிலையில், தற்போது முன்னாள் போட்டியாளர் விஷ்ணு வீட்டுக்குள் வந்துள்ளார்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிக்குள் இருக்கும் விஷ்ணுவின் தோழியான செளந்தர்யா ‘என்னை திருமணம் செய்து கொள்வாயா?’ என்று விஷ்ணுவிடம் கேட்கும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.
மேலும், செளந்தர்யாவை கட்டி அணைத்த விஷ்ணு அவரது காதலை ஏற்றுக் கொண்டார்.
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற விஷ்ணு, இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக வீட்டுக்குள் இருந்தார். அந்த சீசனில் அடிக்கடி கோபம் கொள்ளும் விஷ்ணு மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
மேலும், விஷ்ணுவும் செளந்தர்யாவும் இணைந்து 'வேற மாறி ஆஃபிஸ்’ என்ற இணையத் தொடரில் நடித்து பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.