
மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற உப்பு புளி காரம் இணையத் தொடர் விரைவில் நிறைவு பெற்றவுள்ளது.
இதன் இறுதிநாள் படப்பிடிப்பை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களை இத்தொடரின் நடித்த நடிகர்கள் இணையதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மே 30 ஆம் தேதி முதல் உப்பு, புளி, காரம் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரில் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார்.
கனா காணும் காலங்கள் மற்றும் ஹார்ட் பீட் இணையத் தொடர்களை அடுத்து ஒளிபரப்பான உப்பு, புளி, காரம் தொடரும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
காதல், காமெடி, ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் பல அதிரடி திருப்பங்களுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தவாறு ஒளிபரப்பாகிவரும் இந்த இணையத் தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது.
இதில் நடிகர்கள் பலர் கலந்துகொண்டனர். உப்பு, புளி, காரம் இணையத் தொடரின் இறுதி நாள் படப்பிடிப்பில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | பிக் பாஸ்: விஷ்ணுவிடம் காதலை வெளிப்படுத்திய செளந்தர்யா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.