சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

விடுதலை 2: வெற்றி விழா விடியோ வெளியிட்ட படக்குழு!

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 படத்தின் வெற்றி விழா விடியோ வெளியாகியுள்ளது.

News image

விடுதலை 2: வெற்றி விழாவில் படக்குழுவினர்.

படங்கள்: எக்ஸ்/ ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட்

Updated On :31 டிசம்பர் 2024, 2:16 pm

DIN

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 படத்தின் வெற்றி விழா விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவான விடுதலை - 2 திரைப்படம் டிச. 20 அன்று திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் வெற்றி மாறனின் 4 ஆண்டுகால படமாக உருவாகியுள்ள விடுதலை மீது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு இருந்தது.

படமும் பல திரைகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றதால் பெரிய வணிக வெற்றி சாத்தியமாகவில்லை. இருப்பினும், இப்படம் ரூ. 50 கோடி வரை வசூலித்து வணிக தோல்வியிலிருந்து மீண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

விடுதலை - 2 திரைப்படத்தின் வெற்றியை இயக்குநர் வெற்றி மாறன், தயாரிப்பாளர், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி உள்பட விடுதலை - 2 குழுவினர் இணைந்து நேற்று கொண்டாடினர்.

இந்த நிலையில் அதன் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இச்சந்திப்பின்போது, வெற்றி மாறனுக்கு பெரிய மாலை அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.