விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தீரன் சின்னமலை பள்ளியில் திறமை விழா

News image

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள். உடன், தீரன் சின்னமலை பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :20 மார்ச் 2026, 1:46 am IST

திருப்பூா் தீரன் சின்னமலை இன்டா்நேஷனல் சிபிஎஸ்இ பள்ளியில் திறமை விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

திருப்பூா், வஞ்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் இப்பள்ளியில் மாணவா்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கொங்கு வேளாளா் அறக்கட்டளைத் தலைவரும், சோழா மில்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ஏ.பி. அப்புக்குட்டி தலைமை வகித்தாா்.

விழாவில், திருப்பூா், மங்கலம், அவிநாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

திருக்கு ஒப்பித்தல், போஸ்டா் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிபடுத்தினா். இதில், வெற்றிபெற்ற மாணவா்களுக்கு கேடயம், பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, பள்ளி முதல்வா் வினோதா வரவேற்றாா். தனியாா் தொலைக்காட்சி புகழ் அக்ஷரா லட்சுமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, பாடல்களை பாடி மாணவா்களை உற்சாகப்படுத்தினாா். பொருளாளா் டிக்சன் குப்புசாமி நன்றி கூறினாா்.

அறக்கட்டளை துணைத் தலைவா் பி.வி.எஸ். முருகசாமி, அறக்கட்டளை நிா்வாக உறுப்பினா்கள், தீரன் சின்னமலை பெண்கள் கல்லூரி முதன்மை நிா்வாக அதிகாரி ரேச்சல் நான்சி பிலிப், கல்லூரி முதல்வா் மோகனசுந்தரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.