
தமிழில் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நரேன். பின்னர் அஞ்சாதே, கோ, முகமூடி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மொழிகளில் அதிகமான படங்கள் நடித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, விக்ரம் படங்களில் நடித்து மீண்டும் பிரபலமாகியுள்ளார் நரேன்.
தற்போது தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நரேன் ஆங்கில ஊடகத்து அளித்த பேட்டியில், “நான் கைதி படத்தில் நடித்த பிறகு எனக்கு 50-60 கதைகள் காவலர் கதையாகவே வந்தன. ஆனால் நான் ஸ்கிரிப்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகளை தேர்வு செய்கிறேன். தேவரா படம் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
தமிழில் அடுத்து மணிரத்னம், கார்த்திக் சுப்புராஜ், கௌதம் மேனன், பா. ரஞ்சித் படங்களில் நடிக்க ஆசைபடுகிறேன்” எனக் கூறியுள்ளார்.
எல்சியூ படங்களில் நிச்சயமாக நரேன் இருப்பதால் லோகேஷ் இயக்கும் அடுத்தடுததப் படங்களில் நரேனுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.