'பெண்கள் ஆடையில் ஸிப் எதற்கு...’ கயல் ஆனந்தியின் மங்கை டிரைலர்!

நடிகை கயல் ஆனந்தி நடித்த மங்கை படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
'பெண்கள் ஆடையில் ஸிப் எதற்கு...’ கயல் ஆனந்தியின் மங்கை டிரைலர்!

கயல் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. இப்படத்திற்குப் பின் பரியேறும் பெருமாள், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படங்களில் நடித்து கவனிக்கப்பட்டார்.

பின், 2021-ல் மூடர்கூடம் இயக்குநர் நவீனின் உறவினரான சாக்ரடீஸ் என்பவரைத் திருமணம் செய்த ஆனந்திக்கு ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில், கயல் ஆனந்தி ‘மங்கை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இதன் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது  டிரைலர் வெளியாகியுள்ளது. குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 

பெண் உரிமை, பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் போன்றவற்றைக் குறிப்பிடும் காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com