பிரபல ஒளிப்பதிவாளரைக் காதலிக்கும் ரஜிஷா விஜயன்!

நடிகை ரஜிஷா விஜயன் பிரபல ஒளிப்பதிவாளரைக் காதலிப்பதாகத் தெரிகிறது.
பிரபல ஒளிப்பதிவாளரைக் காதலிக்கும் ரஜிஷா விஜயன்!
Published on
Updated on
1 min read

தமிழ், மலையாளத்தில் நாயகியாக இருப்பவர் நடிகை ரஜிஷா விஜயன். 2016-ல் ‘அனுராக கரிக்கின் வெள்ளம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர், தொடர்ந்து கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தனுஷின் ‘கர்ணன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் ஜெய் பீம், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 

இந்நிலையில், தி ஃபால்ஸ் ஐ (the false eye), கோ கோ (kho kho), லவ்ஃபுல்லி யுவர்ஸ் வேதா (lovefully yours veda) ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான டொபின் தாமஸ், ரஜிஷா விஜயனுடன் இருக்கும் புகைப்படத்தை  இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்து, “ 1461 நாள்களுடன் சூரியனைச் சுற்ற இன்னும் தொடர்கிறோம். இங்கே அதிக அன்பும் சிரிப்பும் அவரவரின் திறன்களையும் வைக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார். 

இப்பதிவில் ரஜிஷா, ‘முடிவில்லாக் காதலைக் நோக்கி..’ எனக் கமெண்ட் செய்துள்ளார். 

இதனால், ரஜிஷா விஜயனும் டொபின் தாமஸும் காதலிப்பது உறுதியாகியுள்ளது. விரைவில், இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com