அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்கிற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நடிகர் விஜய், சினிமாவிலிருந்தும் விலகுவதாக அறிவித்தது அவருடைய ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகம் என்கிற தன் கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் விஜய், தற்போது நடித்துக்கொண்டிருக்கும் கோட் மற்றும் நடிக்கவிருக்கும் விஜய் - 69 படத்தோடு சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதை அறிவித்துள்ளார்.
விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வரும் நிலையில், விஜய்யின் கடைசி படத்தை யார் இயக்குவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. அரசியல் தலைவராக முதல் படம் என்பதால், இப்படம் நிச்சயம் அரசியலை மையமாக வைத்தே உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: அசோக் செல்வனின் புதிய படம்!
இதனிடையே, விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதற்குப் பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். குறிப்பாக, நடிகர் ரஜினிகாந்த்தும் தன் வாழ்த்துகளைக் கூறியிருந்தார். இதற்காக, ரஜினியை செல்போனில் அழைத்த விஜய் அவரின் வாழ்த்துக்கு நன்றி கூறியுள்ளாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.