
'பவால்’, ‘சிச்சோரே’ ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, அடுத்ததாக ராமாயணத்தை படமாக்க உள்ளார்.
இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் நிதிஷ் திவாரி ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இப்படத்தில் நடிகர்கள் யஷ், ரன்பீர் கபூர், நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் நடிகர் ரன்பீர் கபீருக்கு குரல் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: நான் சுமாரான கதைகளில் நடிப்பதில்லை: விஷ்ணு விஷால்
இது குறித்து, “ரன்பீரின் குரல் மிகவும் தாழ்ந்து ஒலிக்கும் இசைக்குரலாக முயற்சிக்கப்படுகிறது. நீங்கள் கண்களை மூடிக்கொண்டாலும் ரன்பீரின் குரலை மட்டுமே வைத்து நீங்கள் புரிந்துக் கொள்ள முடியும். இதை ஒரு குறியீடாகப் பயன்படுத்த உள்ளோம். இதற்கு முன்பு ரன்பீர் நடித்த படங்களில் இல்லாத ஒரு குரலை இயக்குநர் பயன்படுத்தவிருக்கிறார். ஒரு நடிகராக இதை முயற்சிப்பதில் ரன்பீர் ஆர்வமுடன் இருக்கிறார்” எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் படப்பிடிப்பு நடத்தவுள்ளதாகவும் படம் 2025இல் வெளியாகுமெனவும் தகவல்கள்கள் தெரிவிக்கின்றன. ரன்பீர் கபூரின் அனிமல் படம் வசூல் ரீதியாக கலக்கினாலும் பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களும் வந்தது குறிப்பிடத்தக்கது.