பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தமிழக மக்களிடம் அறிமுகமானவர் விஜே அஞ்சனா. அவர் பல தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
கயல் படத்தின் ஹீரோ சந்திரனை 2016இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளார். தற்போது அஞ்சனா படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவார்.
இதையும் படிக்க: திரையரங்கிற்குள் தீயிட்டு கொண்டாடிய பவன் கல்யாண் ரசிகர்கள்!
சில வருடங்கள் முன்பு சைபர் காவல்துறையிடம் புகாரிடும் அளவுக்கு ஆபாச செய்திகளை பயனர்கள் அஞ்சனாவிற்கு அளித்ததாக செய்திகள் வெளியானது.
இதையும் படிக்க: அன்புத் தாய் ஐஸ்வர்யாவுக்கு அன்பு சலாம்: நடிகர் ரஜினி வாழ்த்து!
இந்நிலையில் சைரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதற்கான சேலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
பலரும் “மிகவும் அழகாக இருக்கிறது”, “தேவதை போல இருக்கிறீர்கள்” என புகழ்ந்து வரும் நிலையில் ரசிகர் ஒருவர், “நீங்க ஏன் ஹீரோயின்னா நடிக்க கூடாது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.