நடிகர் விஜய்யின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனைத் திரைப்படமாக அமைந்தது கில்லி. இயக்குநர் தரணி இயக்கத்தில் உருவான இப்படம் 2004 ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்தது. படம் வெளியாகி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று பிளாக்பஸ்டர் ஆனது.
தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான கில்லி, ரூ.50 கோடி வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்கிற சாதனையைப் படைத்து விஜய்யின் மார்கெட்டை அதிகரித்தது.
ஒக்கடுவிலும் கில்லியிலும் வில்லனாக நடித்து அசத்திய பிரகாஷ் ராஜ், ‘ஹாய் செல்லம்’ என்கிற முத்திரை வசனத்தைப் பேசியது இந்தப் படத்தில்தான்.
இதையும் படிக்க: ’கொலைவெறி’ பாடலால் 3 படம் பாதிக்கப்பட்டது: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ளதால், வருகிற ஏப்ரல் 17 ஆம் தேதி இப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். 4கே டிஜிட்டல் தரத்தில் மீண்டும் திரைக்கு வருகிறார் கில்லி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.