கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கங்குவா பணிகள் தீவிரம்!

கங்குவா திரைப்படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.

News image
Updated On :13 பிப்ரவரி 2024, 12:49 pm

சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் 'கங்குவா' சூர்யா நடித்து முடித்துள்ளார்.  இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானியும் வில்லனாக நட்டி (நடராஜ்) நடித்துள்ளனர்.

அனிமல் படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Story image

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று சமீபத்தில் முடிந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கங்குவா படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. 

இந்நிலையில், படத்தின் அடுத்தக்கட்ட பணிகளைப் படக்குழு துவங்கியுள்ளது. இந்தாண்டு ஏப்ரல் வெளியீடாக திரைக்கு வர உள்ளதால் தயாரிப்பு நிறுவனம் படத்தின் பணிகளை முடிக்க தீவிரம் காட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.