ஏஐ தொழில்நுட்பம் மூலம் பிரபலங்கள் பாடல்: ஆதரவு தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஏஐ தொழில்நுட்பத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஏஐ தொழில்நுட்பம் மூலம் பிரபலங்கள் பாடல்: ஆதரவு தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்!
Published on
Updated on
1 min read

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஏஐ தொழில்நுட்பத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்பங்கள் மூலம் எவ்வளவோ மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் இசைத்துறையிலும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

மறைந்த அல்லது பிரபலமானவர்களின் குரலில் ஒரு பாடலை பாட வைப்பது ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் எளிதாகியுள்ளது.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி பல தமிழ்ப் பாடல்களை பாடிய பாடல்கள் வைரலானது. இதனைத் தொடர்ந்து லால் சலாம் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் திமிறி எழுடா பாடலில், மறைந்த பின்னணிப் பாடகர்கள் சாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரது குரலைப் பயன்படுத்தினார்.

ஏஐ தொழில்நுட்பம் மூலம் பிரபலங்கள் பாடல்: ஆதரவு தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்!
வாய்ப்புக்கு நன்றி தனுஷ்: செல்வராகவன் நெகிழ்ச்சி!

இது சர்ச்சையானதைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கமளித்திருந்தார். அவர்களது குடும்பத்தினர் அனுமதியுடன் இதைச் செய்ததாகக் கூறியிருந்தார்.


சமீபத்தில் எஸ்.பி.பி. குரலை பயன்படுத்தியதற்கு அவரது மகன் சரண் வழக்கு பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து லெஜண்டரி பாடகர்களின் குரலை பயன்படுத்தலாம்; அது தவறில்லை எனக் கூறியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் நடித்து அவரே இசையமைக்கும் டியர் படத்தின் தலைவலி பாடல் புரமோஷனில் இதைக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com