மறுவெளியீடான வாரணம் ஆயிரம் கர்நாடகத்தில் வசூல் சாதனை!

சூர்யா நடிப்பில் உருவான வாரணம் ஆயிரம் திரைப்படம் மறுவெளியீட்டில் அசத்தி வருகிறது.
மறுவெளியீடான வாரணம் ஆயிரம் கர்நாடகத்தில் வசூல் சாதனை!

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2008-ஆம் ஆண்டு வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளியானது.

அப்பா - மகனுக்கு இடையேயான உறவின் நெருக்கத்தை வாழ்க்கைப் பிரச்னைகளுடன் இணைத்து உருவாக்கப்பட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அப்பா, மகன் இரண்டு கதாபாத்திரத்திலும் சூர்யாவே நடித்து அசத்தியிருந்தார். 

மறுவெளியீடான வாரணம் ஆயிரம் கர்நாடகத்தில் வசூல் சாதனை!
வாய்ப்புக்கு நன்றி தனுஷ்: செல்வராகவன் நெகிழ்ச்சி!

இதில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்களின் விருப்பப்பட்டியலில் இன்றும் நீடிக்கிறது. காதல், அதன் பிரிவு என உணர்ச்சிகளின் வேகத்திற்கு  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த விதத்தை பலரும் பாராட்டியுள்ளனர்.

சென்னையில், பிரபல திரையரங்கில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரைக்கு முன் ஆடி தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

மறுவெளியீடான வாரணம் ஆயிரம் கர்நாடகத்தில் வசூல் சாதனை!
ஏஐ தொழில்நுட்பம் மூலம் பிரபலங்கள் பாடல்: ஆதரவு தெரிவித்த ஜி.வி. பிரகாஷ்!

சென்னை மட்டுமல்லாது கர்நாடகத்திலும் மறுவெளியீடு செய்யப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கர்நாடகத்தில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டு வசூலில் கலக்கும் முதல் படம் வாரணம் ஆயிரம் எனவும் ரூ.75 லட்சத்துக்கும் அதிகமாக வசூலித்துள்ளது எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com