கருவுற்று இருப்பதை அறிவித்த  பிரபல தொடர் நடிகை!

கருவுற்று இருப்பதை அறிவித்த பிரபல தொடர் நடிகை!

பிரபல தொடர் நடிகை நிஹாரிகா தான் கருவுற்று இருப்பதாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.
Published on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி - 2 தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை நிஹாரிகா. இவர் தொடர் நடிகை மட்டுமில்லை; டான்சரும்கூட.

நிஹாரிகா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். இவர் மேலும் ஜீ தமிழில் இதயத்தை திருடாதே, வித்யா நம்பர் 1, விஜய் தொலைக்காட்சியில் வேலைக்காரன் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

இயக்குநர் ரஞ்சித்தை திருமணம் செய்துகொண்ட நிஹாரிகா, அவருடன் சேர்ந்து வெளியிடும் விடியோக்கள் இணையத்தில் வைரலானது.

கருவுற்று இருப்பதை அறிவித்த  பிரபல தொடர் நடிகை!
அஜயன் சல்லிசேரி - குணா குகை கலைஞர்!
நிஹாரிகா - ரஞ்ஜித்
நிஹாரிகா - ரஞ்ஜித்

இந்நிலையில், நடிகை நிஹாரிகா தான் கருவுற்று இருப்பதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர், " நாங்கள் மூவராக போகிறோம்" என்று பதிவிட்டு கணவருடன் அவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நிஹாரிகாவின் பதிவிற்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com