பாலிவுட் நடிகை ஊர்வசி ரெளடேலா, 2013 முதல் பாலிவுட்டில் நடித்து வருகிறார். லெஜண்ட் என்கிற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தும் தானும் காதலிப்பதாக நடிகை ஊர்வசி ரெளடேலா முன்பு சூசகமாகத் தெரிவித்திருந்தார். இதனை மறுத்த ரிஷப் பந்த், சமூகவலைத்தளங்களில் ஊர்வசியை பிளாக் செய்தார்.
கவர்ச்சியான புகைப்படங்களைத் தொடர்ந்து பதிவேற்றியும் வருகிறார். இந்நிலையில், ஊர்வசி ரௌடேலாவின் 30-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரபல பாடகர் யோ யோ ஹனி சிங் 24 கேரட் தங்கத்தால் தயாரான கேக்கை ஊர்வசிக்கு பரிசளித்ததுடன் இதன் மதிப்பு ரூ.3 கோடி எனக் கூறியுள்ளார்.
இதனால், பிறந்தநாளுக்காக உலகிலேயே அதிக விலைகொண்ட கேக்கை வெட்டியவர் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறார் ஊர்வசி ரெளடேலா.
அதேநேரம், யோ யோ ஹனி சிங் உண்மையைத்தான் சொல்கிறாரா என குழம்பிள்ளனர் ரசிகர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.