தாயாகிறார் தீபிகா படுகோன்!

தாயாகிறார் தீபிகா படுகோன்!

நடிகை தீபிகா படுகோன் கர்ப்பத்தை அறிவித்திருக்கிறார்.
Published on

இந்தியளவில் பிரபல நடிகையாக இருப்பவர் திபீகா படுகோன். தமிழில், கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவான சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து, பாலிவுட் படங்களில் கவர்ச்சியாகவும் நடித்து வருகிறார்.

2018-ல் நடிகர் ரன்வீர் சிங்கைத் திருமணம் செய்துகொண்டவர், திருமணத்துக்குப் பின்பும் பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதை தீபிகா படுகோன் அறிவித்ததுடன் வருகிற செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ளதைக் குறிப்பிட்டு புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

தீபிகா கர்ப்பமானதற்கு ஆலியா பட், ஷ்ரேயா கோஷல் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தாயாகிறார் தீபிகா படுகோன்!
கோட் படத்தைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com