கோட் படத்தைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி!

கோட் படத்தின் ஓடிடி உரிமையைப் பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோட் படத்தைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி!

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது.

கோட் படத்தைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி!
இயக்குநர் பாலா என்னை அடித்தார்: மமிதா பைஜூ

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் துவங்க உள்ளதால் விரைவில் படக்குழு அங்கு செல்ல உள்ளனராம்.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கோட் படத்தைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி!
சினிமா, ஏஐ என மூச்சுவிடாமல் தொடர்ந்து பேசினார்: ராம் கோபால் வர்மா சந்திப்பு குறித்து அமிதாப் பச்சன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com