சினிமா, ஏஐ என மூச்சுவிடாமல் தொடர்ந்து பேசினார்: ராம் கோபால் வர்மா சந்திப்பு குறித்து அமிதாப் பச்சன்!

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஹைதராபாத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை நேற்று சந்தித்து பேசினார்.
நடிகர் அமிதாப் பச்சன் உடன் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
நடிகர் அமிதாப் பச்சன் உடன் இயக்குநர் ராம் கோபால் வர்மா. படம்: ராம் கோபால் வர்மா|எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஹைதராபாத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை (ஆர்ஜிவி) நேற்று சந்தித்து பேசினார். இது குறித்து தனது வலைதளத்தில் அமிதாப் பச்சன் கூறியதாவது:

ஹைதராபாத்தில் எனது படப்பிடிப்பின் கடைசி நாளில் மகா புத்திசாலியான ராமு என்கிற ராம் கோபால் வர்மாவை சந்தித்தேன். அவரது எண்ணங்கள், வெளிப்பாடுகள் எல்லாம் மர்மமாகவும் திகைப்பூட்டுவதாகவும் இருக்கின்றன.

மூச்சுவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களின் கரு குறித்து மிகவும் தனிப்பட்ட அவரது விருப்பு வெறுப்புகளைம், ஏஐ-ஆல் நாம் எங்கு செல்கிறோம்? ஒரு நாளில் என்னவெல்லாம் மாறுகிறது என அதன் புதிர் தன்மைகள் குறித்தும் பேசினார்.

நடிகர் அமிதாப் பச்சன் உடன் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
கமல்ஹாசன், உதயநிதியை சந்தித்த ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ படக்குழு!

இப்போது இருக்கும் நம்பிக்கையின்மை, பயம், சந்தேகம் எதைக்குறித்தும் கவலைப்படாமல் உண்மையாக, போலித்தனமில்லாமல் பல மணி நேரம் உரையாடினோம். விவாதித்தோம். ஒருவரையொருவர் புகழ்ந்துக்கொண்டோம். ஆனால் இதுதான் இறுதியான உண்மை, சரி என நம்பிக்கையில்லாமல் பேசினோம். பல ஆண்டுகளுக்கு முன்பு பேசியதுபோல எல்லாவற்றை குறித்தும் பேசினோம் என்றார்.

ராம் கோபால் வர்மா, அமிதாப் பச்சன் நெடுநாள் நண்பர்கள். அமிதாப் பச்சனை வைத்து சர்கார் எனும் படத்தினை ஆர்ஜிவி இயக்கியுள்ளார். அமிதாப் தற்போது பிரபாஸின் கல்கி 2898 ஏடி படத்தில் நடித்து வருகிறார். இதில் கமல், தீபிகா படுகோன் என முக்கியமான பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

நடிகர் அமிதாப் பச்சன் உடன் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
விஜய் தேவரகொண்டா போன்ற கணவர் வேண்டும்: ராஷ்மிகா

பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா (ஆர்ஜிவி) தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல முக்கியமானப் திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போதைய சில முக்கியமான இயக்குநர்களுக்கு முன்னுதாரணமாக ராம் கோபால் வர்மா இருக்கிறார்.

ராம் கோபால் வர்மாவின் சிவா, சத்யா, ரங்கீலா, சர்கார் ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தற்போது சிறிய அளவிலான படங்களினை இயக்கி வருகிறார்.

ஆந்திர முதல்வர் மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டியின் தேர்தல் பயணத்தை மையமாக வைத்து 'வியூகம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். வரும் மார்ச் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.