ரூ. 100 கோடி மோசடி வழக்கு: அன்பில் மகேஸுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது! உயர் நீதிமன்றம்தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

கமல்ஹாசன், உதயநிதியை சந்தித்த ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ படக்குழு!

சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றுவரும் மஞ்ஞுமல் பாய்ஸ் பட இயக்குநர் கமலை சந்தித்துள்ளார்.

Published On :

பறவ பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ளது மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம்.

இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேரளத்தைச் சேர்ந்த மஞ்சுமெல் என்கிற பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர்.

அங்கு, குணா குகையில் எதிர்பாராத விதமாக ஒருவர் சிக்கிக் கொள்கிறார். உடன் வந்த நண்பர்கள் அவரை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே படத்தின் கதை.  இப்படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், கேரளத்தில் மட்டுமல்லாது தமிழகத்திலும் மஞ்சுமேல் பாய்ஸ் திரைக்காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் உதயநிதியுடன் மஞ்ஞுமல் பாய்ஸ் படக்குழு.

அமைச்சர் உதயநிதியுடன் மஞ்ஞுமல் பாய்ஸ் படக்குழு.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனை படத்தின் இயக்குநர் சிதம்பரம் சந்தித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

படத்தில் குணா குகை, குணா பட பாடல்கள் பெரிதும் இருக்கும். இதுதான் குணா படத்துக்கு பெருமை சேர்க்கிறது என ரசிகர்கள் கூறுகிறார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.